✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Suraj Revanna: ஆண் ஊழியருக்கு பாலியல் தொல்லை! தம்பியை தொடர்ந்து அண்ணன் சுராஜ் ரேவண்ணா கைது

செல்வகுமார்   |  23 Jun 2024 02:34 PM (IST)

Suraj Revanna: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் மூத்த சகோதரரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சூரஜ் ரேவண்ணா: ( Image Source :(X/@BharatBreakings) )

27 வயதான ஆண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.  

சூரஜ் ரேவண்ணா கைது:

கர்நாடகவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் இன்று ( ஜூன் 23 ) கைது செய்யப்பட்டார். 27 வயதான ஆண் ஊழியரை பாலியல் கொடுமை அளித்ததாக, அவர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து , நேற்று இரவு முழுவதும், காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

ஊழியர் புகார்:

பி.டி.ஐ. செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்தன் என்பவர் அளித்த புகாரில், ஜூன் 16 மாலை ஹோலேநரசிபுரா தாலுகாவில் உள்ள கன்னிகடாவில் உள்ள பண்ணை வீட்டில் எம்.எல்.ஏ. ஹெச் டி ரேவண்ணாவின் மூத்த மகனுமான, பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரருமான சூரஜ் ரேவண்ணா பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார்.

 இதையடுத்து, சூரஜ் கைது செய்யப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை ஏமாற்றி , பாலியல் தொல்லை அளித்து, வீடியோ எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போது  சிராஜ்-க்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ஹொலேநரசிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

Published at: 23 Jun 2024 02:34 PM (IST)
Tags: Prajwal Revanna Suraj Revanna Revanna
  • முகப்பு
  • க்ரைம்
  • Suraj Revanna: ஆண் ஊழியருக்கு பாலியல் தொல்லை! தம்பியை தொடர்ந்து அண்ணன் சுராஜ் ரேவண்ணா கைது
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.