திருப்பதி கோயிலில் அஜித் சுவாமி தரிசனம்.. ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..


நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்குக்காக தற்போது ஹைதராபாத்தில் தங்கியுள்ள நிலையில், இன்று அவர் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஜப்பானில் தொடங்க உள்ள நிலையில், படப்பிடிப்பு வேலைகளில் அஜித் பிஸியாவதற்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அஜித் சென்று வந்துள்ளார். மேலும் அங்கு அஜித் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் ரசிகர் ஒருவர் அஜித்துக்கு அன்பளிப்பாக பெருமாள் சிலை வழங்கியுள்ளதும் கவனமீர்த்துள்ளது.


200 ஆண்டுகள் நினைவு முதல் முத்திரை! நடிகர் ரஜினிகாந்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்..


இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்துக்கு அண்டை நாடான இலங்கையிலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களை குறிப்பிடும் வகையில் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் பெருந்தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டை குறிப்பிடும் வகையில் நினைவு முத்திரை வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் நினைவு முத்திரையை நடிகர் ரஜினிகாந்திடம் அந்த அமைப்பிற்கான நிர்வாகி நேரில் சந்தித்து வழங்கினார்.


நாளுக்கு நாள் எகிறும் வசூல்.. 3 நாள்களில் 20 கோடிகளைக் கடந்த விஜய் சேதுபதியின் மகாராஜா!


நடிகர் விஜய் சேதுபதிக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக அமைந்து மகாராஜா திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள இபடத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். மகாராஜா படத்திற்கு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மகாராஜா படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ4.7 கோடிகளையும், இரண்டாவது நாளில் ரூ. 7.75 கோடிகளையும், மூன்றாவது நாளில் ரூ.9 கோடிகளையும் என முன்று நாட்களில் மொத்தம் ரூ 21.45 கோடிகளை வசூலித்துள்ளது.


விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஃபீனிக்ஸ் வீழான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இந்தப் படத்தினை இயக்கியுள்ள நிலையில் நேற்று டீசர் வெளியாகி கவனமீர்த்தது. ஆக்‌ஷன் கதைக்களத்தில் பாக்ஸிங்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் டீசரில் பாக்ஸிங் வீரரைப் போல சூர்யா உழைத்திருக்கும் காட்சி பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும் சூர்யாவின் கண்கள் அப்படியே விஜய் சேதுபதியின் சாயலில் இருப்பது அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.


சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சார்பட்டா வில்லன், பிரபல நடிகர்.. வெளியான மாஸ் அப்டேட்!


பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் எஸ்.கே.23. இப்படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில்,  கன்னட நடிகை ருக்மினி வசந்த் இப்படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் பூஜை தொடங்கி அறிவிப்பு வெளியானது. முன்னதாக துப்பாக்கி வில்லன் வித்யுத் ஜம்வால் இப்படத்தில் இணைந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்தது பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ளார். அதன்படி, சார்பட்டா  பரம்பரையில் டான்சிங் ரோஸாக நடித்து ரசிகர்களை மிரள வைத்த ஷபீர் மற்றும், பிரபல நடிகர் விக்ராந்த் இருவரும் எஸ்கே 23 படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


மேலும் படிக்க: Maharaja Movie Review: மகாராஜாவாக வந்த விஜய் சேதுபதி.. 50வது படத்தில் கலங்கடித்தாரா.. முழு விமர்சனம் இதோ!


Kamal Haasan: கல்கி ட்ரெய்லரில் 3 நொடிகளில் அலறவிட்ட கமல்ஹாசன்.. படத்தில் இவ்வளவு நேரம் தான் வருவாரா!