• செவித்திறன் குறைபாட்டால் அவதிப்படும் பிரபல பாடகி - ரசிகர்களுக்கு அட்வைஸ்




பிரபல இந்தி பாடகியான அல்கா யாக்னி தனக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “என் மருத்துவர்கள் எனக்கு அரிய வகை நரம்பியல் வழி செவித்திறன் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.இது ஒருவகை வைரஸ் தாக்குதலால் ஏற்படக் கூடியது. இப்படியான ஒன்றை எதிர்கொள்ள நான் தயாராகவே இல்லை.ரசிகர்களாகிய நீங்கள் அதுவரை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார். 



  • ரிலீஸ் தேதியை மாற்றிய புஷ்பா 2 படக்குழு -  ஆகஸ்ட் 15ல் ரிலீசாகும் தங்கலான், வணங்கான்


தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 8 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக உள்ள விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய 2 படங்களும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 




  • அரசியலால் சினிமாவை விட்டு விஜய் விலகுவது நஷ்டமா? - நடிகை கஸ்தூரி சொன்ன பதில் 




நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவது சினிமா துறையை பாதிக்காது; விஜய் கடந்த 30 ஆண்டுகளாக பெரிய நட்சத்திரமாக இருந்து வருகிறார்; ஆனால் சினிமா 150 வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது; ஒரு நபருக்காக சினிமா நிற்காது; சினிமா ஒரு கலை, அது அனைவரது பங்களிப்பையும் சேர்த்தது வளருமே தவிர அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என  நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 




  • சமூக வலைத்தளங்களில் கிண்டல் - சாமர்த்தியமாக பதில் சொன்ன விஜய் சேதுபதி மகன் 




நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா “பீனிக்ஸ் வீழான்” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இணையத்தில் வெளியாகும் ட்ரோல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இங்கு இருக்கும் பெரிய பெரிய நடிகர்களையே ட்ரோல் செய்கிறார்கள். இதில் நான் எல்லாம் இல்லாமல் இருப்பேனா? “ என சூர்யா பதிலளித்தார்.




  • வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த இடத்தில் கடுப்பான தங்கர்பச்சான்




நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனிடையே வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வந்த இடத்தில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு நியாயம் கேட்காமல் ஊமையாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.