உலகின் பெஸ்ட் அப்பா! நயன்தாரா முதல் இமான் வரை.. தந்தையர் தின வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!


உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்கள் தந்தையர் தினப் பதிவுகளால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், சினிமா பிரபலங்கள் தங்கள் தந்தைக்கும் தாங்கள் பார்த்த சிறந்த தந்தைகளுக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நயன்தாரா, தன் கணவர் விக்னேஷ் சிவன் தன் மகன்கள் உயிர், உலக் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து உலகின் சிறந்த அப்பா எனப் பதிவிட்டுள்ளார். “உலகின் மிகவும் அபிமான தந்தையான அப்பாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என இசையமைப்பாளர் இமான் பதிவிட்டுள்ளார். தந்தை ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “என் இதயத்துடிப்பு, மை ஆல், லவ் யூ அப்பா" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.


இப்படியல்லவா மாமனார் கிடைக்கணும்.. உமாபதியை புகழ்ந்து தள்ளும் அர்ஜூன்!


மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் என்னுடைய மருமகன் உமாபதிக்கு இருக்கிறது என நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.  நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த ஜூன் 10 ஆம் தேதி கெருகம்பாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில்  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று புதுமண தம்பதியினர், அர்ஜூன் - தம்பி ராமய்யா ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது “மருமகன் உமாபதியுடனான சந்திப்பு வித்தியாசமானது. நான் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதில் ஒருவராக பங்கேற்றார். என்னமோ தெரியல. அங்கிருந்தவர்களில் ரொம்ப பிடித்தது உமாபதியை தான். இவர்கள் காதலிப்பார்கள் என்று அப்போதெல்லாம் தெரியாது. அவர் ரொம்ப திறமையானவர்” எனப் பேசியுள்ளார்.


வாவ்! மகாராஜா இயக்குனரை பாராட்டிய பிரபல இயக்குனர் எச்.வினோத்!


விஜய் சேதுபதி நடிப்பில் குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நேற்று முன் தினம் வெளியாகி பேசுபொருளாகியுள்ள திரைப்படம் மகாராஜா. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தாலும் திரைத்துறையினரும்  சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஹெச். வினோத் மகாராஜா படத்தை சிறப்பாக எடுத்ததற்காக நித்திலன் சாமிநாதனை நேரில் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


விஜய்யின் “தி கோட்” பட ரிலீஸ் தேதியில் சிக்கல்.. படக்குழுவினர் அப்செட்! ரசிகர்கள் ஷாக்!


நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு காம்போவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி செப்.5 என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. படத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு டீ ஏஜிங் தொழில்நுட்பம் உபயோகிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டீ ஏஜிங் பணிகள் நிறைவடைய கால தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது முழுமையாக முடிவடைய கூடுதலாக பத்து நாட்கள் எடுத்துக் கொள்ளகூடும் என்றும் இதனால் படத்தின் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதால் வெளியீடு தள்ளிப்போகக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.