பாராட்டுகளைக் குவிக்கும் விஜய் சேதுபதியின் 50ஆவது படம் மகாராஜா


நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக குரங்கு பொம்மை படப்புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ளது மகாராஜா திரைப்படம். அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா, திவ்ய பாரதி, நட்டி நடராஜ், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனமீர்த்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ முன்னதாக நடைபெற்று முடிந்த நிலையில், படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.  குறிப்பாக விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உள்ளொட்டோரின் நடிப்பும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


"ஆழ்ந்த அனுதாபங்கள்" குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நடிகர் விஜய் இரங்கல்


குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் உள்ள சமையலறையில் தீப்பிடித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிய நிலையில், 40 இந்தியர்கள் உள்பட 53 நபர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில்,  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டியும் விஜய் பதிவிட்டுள்ளார்.


தலையில் காயங்களுடன் குளியலறையில் கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்.. 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!


தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட பிரபல தமிழ் படங்களில் நடித்த பிரதீப் விஜயன் உயிரிழந்துள்ள செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த சொன்னா புரியாது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். இறுதியாக ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தில் நடித்திருந்தார். சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்த இருவர் கடந்த இரு நாள்களாக வீட்டினை விட்டு வெளியேறாத நிலையில், நண்பர்கள் தொலைபேசியில் அழைக்க முயன்று தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது. இந்நிலையில், காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் விஜயன் கிடந்துள்ளார். அவர்ருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


ஃபில்டர் காப்பி கடை போட்ட அனிருத்! வி.எஸ் அனி நொறுக்குத் தீனிகள்!


தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இசையமைப்பாளராக இளசுகளை ஈர்த்து வலம் வரும் அனிருத், தமிழ் தாண்டி, தெலுங்கு, இந்தி சினிமா ரசிகர்களையும் ஈர்த்து ராக் ஸ்டாராக திரையுலகில் கலக்கி வருகிறார். அனிருத் தற்போது சினிமா தவிர்த்து மற்ற தொழில்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஸ்டார்ட் அப் நிறுவனமான வி.எஸ் மணி & கோ என்கிற காஃபி மற்றும்  உணவு பண்ட நிறுவனத்துடன் கை கோர்த்து அனிருத் இணை நிறுவனராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதுகுறித்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் அனிருத் அறிவித்துள்ளார்.