கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்கள்! கூலாக அட்வைஸ் செய்து அனுப்பி வைத்த திருச்சி எஸ்.பி. - நடந்தது என்ன?

தனக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று சிறுவர்களுக்கும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Continues below advertisement

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் முழுமையாக குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ,தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Continues below advertisement

குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள், லாட்டரி சீட்டு மற்றும் வெடி மருந்துகள் பயன்படுத்துபவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். அதேசமயம் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வழிபறி, திருட்டு கொலை சம்பவங்களை ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சியில் பிரபலமான ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகன் என்பவரை என்கவுண்டர் செய்யப்பட்டது, மற்ற ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


திருச்சி எஸ்.பி வருண்குமார்  தலை விரைவில் சிதறும் - கொலை மிரட்டல் விடுத்த சிறார்கள்

இந்நிலையில் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டாகிராம்  ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்தது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதன் அடிப்படையில், மேற்படி இளஞ்சிறார் என்பவர் மீது, வாத்தலை காவல் நிலைய குற்ற எண்- 69/24, சட்டபிரிவு 153(В), 505(2) IPC r/w 66(D) IT Act-21 09.06.2024- வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டு, மேற்படி நபரை அழைத்து விசாரணை செய்தபோது, 17 வயது சிறுவன் மற்றும்  தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது.

மேற்படி மூவரும் இளஞ்சிறார்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய நபரை தேடிவருகின்றனர்.


கொலை மிரட்டல் விடுத்த சிறார்களுக்கு கூலாக அட்வைஸ் செய்த திருச்சி எஸ்.பி. வருண்குமார்

இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூன்று சிறார்கள் பெற்றோர்களை எஸ். பி வருண்குமார் அழைத்து அறிவுரை வழங்கினார். முன்னதாக மூன்று சிறார்கள் வழக்கு பதிவு செய்து அறிவுரையுடன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேரடியாக இந்த செயலில் ஈடுபட்ட சிறார்களின் பெற்றோர்களிடம்  திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதுபோன்ற செயல்களை தங்களது பிள்ளைகளை ஈடுபடாமல் வைப்பதற்கு நல்வழியை காட்டுங்கள் என அறிவுரை செய்தார்.

மேலும் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டு விதமாக பதிவுகளை பதிவிட்டால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola