இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறவில்லை...இசையமைப்பளர் யுவன் ஷங்கர் ராஜா விளக்கம்.


கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா தன் இன்ஸ்டாகிராம் கணக்கை இன்று டீஆக்டிவேட் செய்ததாக முன்னதாக இணையத்தில் தகவல் பரவியது. மேலும், சமீபத்தில் வெளியான தி கோட் படத்தின் விசில் போடு பாடலுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களால் தான் யுவன் தன் அக்கவுண்டை டீஆக்டிவேட் செய்ததாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் தற்போது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து யுவன் தன் எக்ஸ் தளக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.


எனக்கு சிகரெட் பழக்கம் இருக்கு.. நான் இத சொல்ல முடியாது.. ஃபஹத் ஃபாசில் பளிச்!


மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் ஃபகத் ஃபாசில் தற்போது மலையாளம் தாண்டி தமிழ், தெலுங்கு என பிற தென்னிந்திய சினிமாக்களிலும் கோலோச்சி வருகிறார். கதாபாத்திரத்துக்கு கதாபாத்திரம் வேறுபாடு காண்பிக்கும் ஃபகத், குறிப்பாக தன் வில்லத்தனமாக நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், ஃபகத் சமீபத்தில் வெளியாகி தோல்வியைத் தழுவிய தூமம் படம் பற்றியும் தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கம் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.


கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல்.. இயக்குநர் லிங்குசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!


2015ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்பட்த்தின் தோல்வி பற்றி மனம் திறந்து பேசியுள்ள இயக்குநர் லிங்குசாமி, கமல்ஹாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். உத்தமவில்லன் படம் தன்னை மிகப்பெரிய பொருளாதார சிக்கலுக்கு தள்ளிய படம் எனத் தெரிவித்துள்ள லிங்குசாமி, கமல்ஹாசன் படம் முடிந்ததும் எடிட் செய்வது பற்றி வாக்கு தந்துவிட்டு அதை மாற்றம் செய்யாமலேயே ரிலீஸ் செந்ததாகத் தெரிவித்துள்ளார்.


உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் நடிகை அலியா பட்! வேற யார்லாம் லிஸ்ட்ல இருக்காங்க?


பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை அலியா பட். சென்ற ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கையுடன் மற்றொருபுறம் ஹாலிவுட்டிலும் தடம்பதித்து அலியா பட் தொடர்ந்து கவனமீர்த்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்கள் குறித்த டைம்ஸ் இதழின் பட்டியலில் அலியா பட் இடம்பெற்றுள்ளார்.


“சாதியை உருவாக்கியவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” - கவனம் ஈர்த்த 'மனுசி' ட்ரெயிலர்!


அறம் படம் மூலம் பாராட்டுகளைக் குவித்த கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா  நடித்துள்ள மனுஷி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் க்ராஸ் ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், நாசர், ஹக்கிம் ஷா, தமிழ், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.