கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவது வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்தப் படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் கதாபாத்திரத்தின் நடித்த கிலியன் மர்ஃபி இந்தப் படத்திற்காக வாங்கிய சம்பளத் தொகை பற்றிய தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஓப்பன்ஹெய்மர்


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோஃப்ர் நோலன் தற்போது அணு ஆயுதத்தைக் முதல் முதலில்  கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மராக கிலியன் மர்ஃபி நடித்து வருகிறார்.


கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் கிலியன் மர்ஃபி முதன்முறையாக இப்படத்தில் பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள். யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.


ஓப்பன்ஹெய்மர் பட்ஜட்


ஓப்பன்ஹெய்மர் படம் சுமார் 180 மில்லியன் டாலர் செலவில் (1400 கோடி) உருவாகி இருக்கும் திரைப்படம் . இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் படம்பிடித்துள்ளார் நோலன். ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரத்தின் நடித்த கிலியன் மர்ஃபி இந்தப் படத்துக்காக சுமார் 10 மில்லியன் டாலர்கள் (அதாவது 82 கோடிகள்) சம்பளமாக பெற்றுள்ளார்.


படத்தின் துணைக் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் ராபர்ட் டெளனி மற்றும் மேட் டேமன் ஆகிய இருவரின் சம்பளத்தைக் காட்டிலும் இரு மடங்கு கிலியனின் சம்பளம் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் கதாபாத்திரம் முக்கியத்துவம் நிறைந்ததாக இருந்ததன் காரணமே இவ்வளவு அதிகப்படியான சம்பளத்திற்கு காரணம்.


இரண்டு நாள் வசூல்


கடந்த 21ஆம் தேதி வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் முதல் நாள் இந்தியாவில் 14 கோடிகளையும் இரண்டாவது நாளாக 17 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் இரண்டு நாட்களில் 31 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரக்கூடிய வாரங்களில் படம் கூடுதல் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் ஓப்பன்ஹெய்மர்  திரைப்படம் முதல் வாரத்திற்குள்ளாக 165 மில்லியன் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.