Chennai Film Festival: சென்னை சர்வதேச திரைப்பட விழா.. களமிறங்கும் உலக சினிமாக்கள்.. தமிழில் 12 படங்கள்.. - முழு லிஸ்ட்!

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன

Continues below advertisement

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), சென்னையில் டிசம்பர் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த எண்ணிகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களும் மற்றும் கேன்னஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. உலக சினிமாவை கொண்டாடும் முயற்சியில் நடைபெற உள்ள இந்த விழாவில் தமிழ் மொழியில் இருந்து 12 படங்கள் போட்டியிட உள்ளன. 

Continues below advertisement

தமிழ் திரைப்படங்களின் பட்டியல்:

இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 தமிழ் படங்களில்,

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி, பா.ரஞ்சித்தின் ரொமான்ஸ் படமான நட்சத்திரம் நகர்கிறது. ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், விஜய் சேதுபதி- சீனு ராமசாமியின் மாமனிதன், ராம்நாத் பழனிகுமாரின் ஆதார், சிம்புதேவனின் ஆந்தாலஜி படமான கசடதபற, வைபவ் நடிப்பில், அசோக் வீரப்பனின் பஃபூன், மனோ வீ கண்ணதாசனின் இறுதி பக்கம், ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஓ2, பிகினிங், யுத்தகாண்டம், கோட்  ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

தகுதியான தமிழ் படங்களுக்கு CIFF-ல் போட்டி பிரிவு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 12 தமிழ் படங்கள் இந்த பிரிவில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகின்றன.

மற்ற விருகளை வென்ற திரைப்படங்களும் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆஸ்கர் விருதிற்கு சென்ற 6 படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கர் விருதிற்கு சென்ற 6 படங்கள்:

  • ஏ பீஸ் ஆஃப் எப்கை – சுவிட்சர்லாந்து
  • பியூட்டிஃபுல் பீயிங்ஸ் - ஐஸ்லாந்து
  • வேல்டு வார் ய – ஈரான்
  • மெடிட்டேரியன் பீவர் -பாலஸ்தீளம்
  • தி கிரேவ்டிக்கர்ஸ் வைஃப் - சோமாலியா
  • தி மேன் ஹு சோல்டு கிஸ் ஸ்கின் -துனிசியா

இந்திய பனோரமா பிரிவில் 15 இந்திய திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன, இந்த பட்டியலில் மலையாளம், பெங்காலி, தெலுங்கு ,மராத்தி, கன்னடம் ,ஒரியா, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


மற்ற விருதுகளை வென்ற திரைப்படங்கள் 32 திரைப்படங்கள் உலக மொழிகளில் இருந்து இடம்பெற்றுள்ளது. உலக அளவில் இருந்து நமக்கு பரிச்சயமான பலமொழி திரைப்படங்களும், நாம் இதுவரை கேள்வி கூட படாத மொழிகளில் இருந்தும் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது உலக சினிமா ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது, அது மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்கள் ஆவலோடு இந்த விருது வழங்கும் விழாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்பட விழா குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள;- 

 

                                     

Continues below advertisement