கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. மற்றொருபுறம், இந்தியத் திரைப்படங்களுக்கு கிறிஸ்டோஃபர் நோலன் மிகப் பெரிய ரசிகர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசனின் படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் என்கிற இந்தத் தகவல் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.


கிறிஸ்டோஃபர் நோலன்


ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களில் சமகாலத்தின் மாஸ்டர் என்று கிறிஸ்டோஃபர் நோலனை குறிப்பிடலாம்.  இவரது ஒவ்வொரு படமும் அவரது தனித்துவமான ஸ்டைலில் புதிதான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதோடு பல விதமான கேள்விகளையும் ரசிகர்கள் மனதில் எழுப்பிவிடும்.


அதே நேரத்தில் தொழில்நுட்பரீதியாகவும் தொடர்ச்சியாக புதிய முயற்சியை மேற்கொள்பவர். மொமெண்டோ, இன்செப்ஷன், இண்டர்ஸ்டெல்லார், பேட்மேன், டன்கிர்க், தற்போது ஓப்பன்ஹெய்மர் என இவரது படங்களுக்கு இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய வரவேற்பு இந்து வருகிறது.


இயக்குநராக ஆசைப்படும் ஒவ்வொருவரும் நோலனின் படங்களை பாடமாக கருதுகிறார்கள். அதே நேரத்தில் தற்போது புகழ்பெற்ற இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலருக்கும் பிடித்தமான இயக்குநராக நோலன் இருந்து வருகிறார். அதில் உலகநாயகன் கமல்ஹாசனும் ஒருவர்.


நீண்ட நாள் முந்தைய  சந்திப்பு


சில ஆண்டுகள் முன்பு நோலன் இயக்கிய 'டெனட்' திரைப்படம் வெளியான தருணத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கிறிஸ்டோஃபர் நோலனை சந்தித்துப் பேசியபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது மீண்டும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்தச் சந்திப்பின்போது நோலனின் டெனட் படத்தை டிஜிட்டல் வடிவத்தில் பார்த்ததற்காக நோலனிடம் மன்னிப்புக் கேட்டார் கமல்ஹாசன். அதற்கு பிராயசித்தமாக ஃபிலில் ரோலில் எடுக்கப்பட்ட தனது ‘ஹே ராம்’ படத்தை அவருக்கு டிஜிட்டலில் பார்க்கக் கொடுத்துள்ளார். அப்போது கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை நான் முன்னதாகவே பார்த்திருப்பதாக கூறியுள்ளார்  நோலன். இந்தத தகவல் கமல்ஹாசன் மட்டுமில்லாமல் இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


கஜினி


மற்றொரு தகவல், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா அசின் நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் நோலன்  இயக்கிய மொமெண்டோ திரைப்படத்தை தழுவி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியன் 2


ஷங்கர் இயக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா மேலும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.


மேலும் படிக்க: Sync Movie Review: 'மொத்தமே ஒன்றரை மணி நேரம் படம் தான்' - திகில் கிளப்பியதா “சிங்க்” படம்?.. விமர்சனம் இதோ..!


Die No Sirs Review: ஷார்ப் வசனங்கள், கேங் வார்... கோலிவுட்டுக்கு மற்றுமொரு ‘வட சென்னை’ வரவு... ’டைனோசர்ஸ்’ திரைப்பட விமர்சனம்!