கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் பாராட்டுக்களைப் பெற்ற ஓப்பன்ஹெய்மர் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

Continues below advertisement

ஓப்பன்ஹெய்மர்

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானப் படம் ஓப்பன்ஹெய்மர். கிலியன் மர்ஃபி, ராபர்ட் டெளனி, எமிலி ப்ளண்ட்,  மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பியூ உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனு குண்டை கண்டுபிடித்த ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையைத் மையமாக வைத்து எழுதப்பட்ட புலிட்சர் விருது பெற்ற ‘American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer’ எனும் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஓப்பன்ஹெய்மர். 

Continues below advertisement

முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சரிந்து கிடந்த ஹாலிவுட் சினிமாவை மீண்டும் சிகரம் தொட வைத்தது. முன்னதாக டாக் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபள் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டாத நிலையில் ஓப்பன்ஹெய்மர் படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் கோடி வசூலித்தது. இந்தியாவில் மட்டும் இப்படம் 100 கோடிகளுக்கும் மேலாக வசூலித்தது. 

சர்ச்சைகள்

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகின. படுக்கை அறை காட்சிகளில் பகவத் கீதை வசனம் பேசுவது போல் காட்சிகள் இருந்ததால் இந்தியாவில் இப்படத்திற்கு அர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் குறிப்பிட்ட காட்சிகளை சென்சார் வாரியம் படத்தில் இருந்து நீக்கவும் செய்தது. 

விருதுகள்

வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது விழாவில் பெரும்பாலான பிரிவுகளில் இப்படமும் படத்தின் நடிகர்களுடம் தேர்வாகி இருப்பது குறிப்பிடத் தக்கது. இது தவிர்த்து கோல்டன் க்ளோப் உள்ளிட்ட விருதுகளையும் படம் வென்றுள்ளது.

ஓடிடி ரிலீஸ்

திரையரங்குகளில் வெளியாகி 8 மாதங்களுக்கு மேலாக ஆகும் நிலையில் ஓப்பன்ஹெய்மர் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படாமல் இருந்தது. அமேசான் பிரைமில் இப்படத்தை கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி மட்டுமே கொடுக்கப் பட்டது. ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப் பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் முழுவதுமாக பார்க்க வேண்டும் என்பதே இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் விருப்பமாக இருந்தது. மேலும் படம் வெளியாகி 100 நாட்கள் நிறைவடைவதற்கு முன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர்களிடம் இயக்குநர் திட்டவட்டமாக பேசிவிட்டார். 

தற்போது ஓப்பன்ஹெய்மர் படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க ; Karthigai Deepam; தீபாவைத் தேடி வந்த பத்திரிகையாளர்கள்: வீடியோ காலில் சிக்கிய ஆனந்த்: கார்த்திகை தீபம் இன்று