டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது என்பதை காணலாம்.
வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது; என்னதான் டிஜிட்டல் யுகத்தை நோக்கி பார்வையாளர்கள் நகர்ந்தாலும் வார நாட்களில் சீரியல்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களும் இன்றளவும் பார்வையாளர்களின் ஃபேவரைட்டான ஒன்றாகவே உள்ளது. இதனை ஒரு கருவியாக கொண்டு சேனல்கள் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்கின்றது.
இதனைத் தவிர்த்து பண்டிகை நாட்களில் ஒளிபரப்பாகும் புதுப்படங்களை காணவும் பார்வையாளர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். அதனால் தான் வார இறுதி நாட்களில் அதிக டிஆர்பியை பெறும் வகையில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வகையில் அடுத்த பண்டிகையாக டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது; இம்முறை கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஒரு நாள் லீவு போயிடுச்சே என பலரும் புலம்பி வரும் நிலையில் தொலைக்காட்சி சேனல்கள் சூப்பரான படங்களை ஒளிபரப்பவுள்ளது.
அதன்படி சன் டிவியில் ஞாயிற்றுகிழமை காலை 9.30 மணிக்கு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படமும், மதியம் 3 மணிக்கு சூர்யா, சமந்தா அஞ்சான் படமும் ஒளிபரப்பாகவுள்ளது. இதேபோல் மாலை 6.30 மணிக்கு தனுஷ், இந்துஜா நடித்த “நானே வருவேன்” படமும், இரவு 9.30 மணிக்கு வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா நடித்த அரண்மனை படமும் ஒளிபரப்பாகிறது.
அதேசமயம் கலர்ஸ் தமிழ் சேனலில் மதியம் 2 மணிக்கு வைபவ், அனேகா நடித்த ‘பபூன்’ படம் ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த “ஆர்.ஆர்.ஆர்” படமும் ஒளிபரப்பாகிறது. அதேபோல் கலைஞர் டிவியில் நடிகை அனேகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த “மீண்டும்” படம் ஒளிபரப்பப்படுகிறது.