விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சக கொள்ளை கூட்டாளியை நண்பனே கொலை செய்து ஏரியில் புதைத்த சம்பவத்தில் இரண்டு தினங்களாக ஏரியில் தேடி நேற்று உடலை போலீசார் மீட்டனர். விக்கிரவாண்டி அருகேயுள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தை சார்ந்த கவியரசன் என்ற இளைஞர் மீது பல்வேறு குற்றவழக்குகள் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் கவியரசன் காணமால் போனதால் கவியரசனை கண்டுபிடித்து தருமாறு விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அவரது தந்தை கலியமூர்த்தி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி போலீசார் கவியரசனின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையில் கவியரசனுக்கும் அவரது நண்பனான ராம்குமாருக்கும் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் மது போதையில் தனது நண்பர்களான அன்புமணி, சஞ்சய், மனோ ஆகியோருடன் இணைந்து ராம்குமார் கவியரசனை கொலை செய்தது ஆவுடையார்பட்டு ஏரியில் புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ராம்குமாரை மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்த போலீசார் ஆவுடையார்பட்டு ஏரியில் தீயனைப்பு வீரர்கள் உதவியுடன் கடந்த 17 ஆம் தேதி முதல் கவியரசனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு தினங்களாக உடலை தேடிய நிலையில் இன்று போலீசார் ஏரியிலிருந்து உடலை மீட்டனர்.
விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் யாரேனும் விற்பனை செய்தால் அவர்களை பற்றிய தகவல்களை நேரடியாக காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநாதா IPS., அவர்களின் 94981-11103. எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்