விக்ரம்

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக மாறுபட்ட கதைக்களன்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம் கடந்தாண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த தங்கலான் திரைப்படம் விக்ரமின் நடிப்பிற்கு நிறைய பாராட்டுகளை பெற்றது தங்கலான் படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்க இருக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடித்த சமீபத்தில் வெளியான மார்க்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது

மார்கோ ரீமேக்கில் விக்ரம்

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்து கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்க்கோ. சமீப காலங்களில் ராவான ஆக்‌ஷன் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெருகி உள்ளது. கன்னடத்தில் கேஜிஎப் , சலார் போன்ற படங்கள் பான் இந்திய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் தமிழில் லியோ போன்ற படங்கள்  வரவேற்பை பெற்றனர் .தற்போது மலையாள சினிமாவிலும் ஆக்சன் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் மார்க்கோ திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பரவலான ரசிகர்களை சென்று சேர்ந்துள்ளது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன. மேலும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன விக்ரமை நீண்ட நாட்களாக ஒரு முழு ஆக்ஷன் திரில்லர் படத்தில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த தகவல் அவர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.

வீர தீர சூரன்

விக்ரம் நடித்துள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடித்துள்ளார். எஸ் ஜே சூர்யா சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்

 ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார் 

எச் ஆர் பிக்சர்ஸ் சார்பாக சிபு தமீம் இப்படத்தை தயாரித்துள்ளார்.