நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள், அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலணி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் நடிப்பில் உருவாகிவரும் மற்றுமொரு திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் விக்ரமிற்கு வெவ்வேறு கெட்டப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் விக்ரமிற்கு ஜோடி போடுகிறார் கே.ஜி.எஃப் பட புகழ் ‘ஸ்ரீநிதி ஷெட்டி. முதல் முறையாக விக்ரமிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. கோப்ரா படத்தை  மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க , ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா பேரச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


 



முன்னதாக சென்னையில் சில பகுதிகள் மற்றும்  ரஷ்யாவில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் அடுத்தக்கட்ட  படப்பிடிப்பு நேற்று  தொடங்கியுள்ளது. இதற்காக கல்கத்தா விரைந்துள்ளார்களாம் கோப்ரா படக்குழு. முன்னதாக விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தின் படப்பிடிப்புகள் கொல்கத்தாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வரும் சியான் 60 படத்தின்  கொல்கத்தா ஷூட்டிங் வேலைகளை முடித்துக்கொடுத்த கையோடு கோப்ரா படத்தின் வேலைகளிலும் கவனம் செலுத்த உள்ளாராம் விக்ரம்.  கொல்கத்தாவில்  படப்பிடிப்பு முடிந்த கையோடு  சென்னை திரும்பும் விக்ரம் மீண்டும் சியான் 60 படத்தின் வேலைகளில் இறங்க உள்ளார். படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க 6 நாட்கள் திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு. அது முடிந்த கையோடு அடுத்த வாரத்தில் படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்-60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் இந்த படத்தில் நெகட்டிவ் சாயல் கதாபாத்திரத்திலும் துருவ் கதாநாயகனாகவும் அதுவும் போலீஸ் கெட்டப்பில் வலம் வருவார் எனவும்  கூறப்படுகிறது. படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி வருகிறது. படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.


குறிப்பாக துருவ் விக்ரமின் படங்கள் அனைத்தையும் படமாக்கிவிட்டார்களாம் படக்குழு. எஞ்சியிருக்கும் கிளைமேக்ஸ் காட்சிகளை எடுத்துவிட்டால் படம் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகளுக்கு தயாராகிவிடும்.  ப. தவிர வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, முத்துக்குமார், சனத் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜ், விக்ரம், துருவ் விக்ரம் ஆகிய மூவரின் இறுதி படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால் சியான் 60 படத்தையே பெரிதும் நம்பியுள்ளதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.