தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். அவர் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் கடந்த வருடம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். விக்ரமுடன் இந்த படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சீயான் 60 என்று அழைக்கப்பட்டு வந்த அந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை எனப்படும் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விக்ரம் ஒரு ராயல் என்பீல்ட் வண்டியை சிரித்துக்கொண்டே ஓட்டிக்கொண்டு வருவது போலவும், அவருக்கு பின்னால் ஏராளமான கைகள் இருப்பது போலவும் உள்ளது. இந்த புகைப்படத்தையும், படத்தின் பெயரையும் விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.