மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதிலும், தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகவும், வீட்டில் தனிமை சூழ்நிலையில் இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதனை செய்து பாதுகாப்பாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


வரும் ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவிக்கு 67 வயதாகிறது. ஆனால் இன்னும் அவரது மார்க்கெட் மிகவும் வலுவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டரில் பதிவில், "அன்புள்ள அனைவருக்கும் வணக்கம், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி, நான் நேற்றிரவு லேசான அறிகுறிகளுடன் கோவிட் 19 பாசிட்டிவ் சோதனை செய்தேன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


 






முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆந்திர முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியை தாடேபள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது மெகாஸ்டார் சீரஞ்சீவி மீண்டும் அரசியலில் ஈடுபட இருப்பதாக செய்திகள் பரவியது.




இதுகுறித்து விளக்கமளித்த அவர், "முதலமைச்சரும் நானும் நட்பு ரீதியாகவே சந்தித்தோம். இது சாதாரண சந்திப்பே தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இருவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு கூட சாப்பிட்டோம். இதுபோன்ற சந்திப்புகள் எப்போதாவது நடக்கும். அரசியல் ரீதியாக சந்திருந்தால் முதல்வர் அலுவலகத்தில் நிகழ்ந்து இருக்கும். அவரது வீட்டில் இல்லை" என்றார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண