80-90 களில் கோலிவுட்டி முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் குஷ்பு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
நடிகை குஷ்பு தன்னை சார்ந்த விஷயங்களை பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடம் பகிருவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் எப்பொழுதும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இந்தநிலையில், அவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கையால் செய்யப்பட்ட சோப்புகளை தயாரிப்பதில் இதுதான் எனது முதல் முயற்சி. பூஜ்ஜிய இரசாயனங்கள் அற்ற இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த சோப்பு வடிவம் சாக்லெட் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த வீடியோ பதிவின் கீழ் பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், வாவ் வேறலெவல் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், சமீபத்தில் நடிகை குஷ்பு தான் 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார் அது வைரலாக ஷேர் செய்யப்பட்டது. மேலும் தான் தற்போது ஆரோக்யமாக இருப்பதாகவும் , தனது புகைப்படத்தை பார்த்து உங்களில் சிலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என தோன்றினால் அதுவே எனக்கு போதும் என்றும் பகிர்ந்திருந்தார்.
கடந்த, ஜூலை மாதம் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்படி அவரது ட்விட்டர் டிபியும், அவர் போட்டோவும் வித்தியாசமான உருவப் படத்துடன் மாற்றப்பட்டிருந்தது. briann என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவரது ட்விட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தன.ட்விட்டரில் 819 பேரை குஷ்பு பின் தொடர்கிறார். 13 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்