Watch video: 'கிளிமஞ்சாரோ மலை கனிமஞ்சாரோ'.. பழங்குடியினருடன் வைப் செய்த சின்மயி.. வைரல் வீடியோ..!

Chinmayi Sripadha : 'கிளிமஞ்சாரோ...' பாடலை மாசாய் பழங்குடியினருடன் சேர்ந்து பாடி என்ஜாய் செய்யும் சின்மயியின் வீடியோ சோசியல் மீடியாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'எந்திரன்'. மிக பெரிய வெற்றி படமாக அமைந்த இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். 

சின்மயியின் கிளிமஞ்சாரோ :

எந்திரன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் மிகவும் வித்தியாசமான ஒரு பாடலாக வித்தியாசமான ஒரு லொகேஷனில் படமாக பட்டு இருத்தது 'கிளிமஞ்சாரோ மலை கனிமஞ்சாரோ...'  பாடல். பா. விஜய் எழுதிய வரிகளுக்கு தன்னுடைய இனிமையான குரலில் அழகு சேர்ந்து இருந்தனர் பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபாதா மற்றும் பாடும் நிலா எஸ்.பி.பி. இப்பாடலில் பழங்குடிகளின் நடனம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்டாக அமைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

கென்யாவில் சின்மயி :

சின்மயி தற்போது மியூசிக் கான்செர்ட் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கென்யாவுக்கு சென்றுள்ளார். அங்கே தான் பாடிய ஆல் டைம் ஃபேவரட் பாடலான 'கிளிமஞ்சாரோ மலை கனிமஞ்சாரோ...' பாடலை அந்த ஊரை சேர்ந்த மாசாய் பழங்குடியினருடன் சேர்ந்து பாடி என்ஜாய் செய்துள்ளார். சின்மயி பாட மாசாய் பழங்குடி மக்கள் கோரஸ் பட மிகவும் ரம்மியமான அந்த தருணத்தை ஒரு வீடியோவாக படம் பிடித்துள்ளார். அந்த அற்புதமான வீடியோவை தந்து சோசியல் மீடியா பக்கம் மூலம் ரசிகர்கள் என்ஜாய் செய்வதற்காக பகிர்ந்துள்ளார். சின்மயி போஸ்ட் செய்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.     

 

 

இரண்டாவது வாய்ப்பு :

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படத்தில் பாடுவதை தன்னுடைய கனவாக கொண்டு இருந்த சின்மயிக்கு இப்பாடல் மூலம் இரண்டாவது சான்ஸ் கிடைத்தது. ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் ரஜினிகாந்த் 
- ஸ்ரேயா சரண் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான 'சிவாஜி : தி பாஸ்' படத்தில் இடம்பெற்ற 'சஹானா சாரல் தூவுதோ...' என்ற இனிமையான பாடலை பாடி இருந்தார் சின்மயி ஸ்ரீபாதா என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்திரன் படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பிறகு 'கிளிமஞ்சாரோ மலை கனிமஞ்சாரோ...' பாடல் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.   

Continues below advertisement
Sponsored Links by Taboola