'ரஜினி அங்கிள் கூட ஹீரோயினா நடிக்க ஆசை’ - குழந்தை நட்சத்திரம் மானஸ்வி பேசுற பேச்ச பாருங்க!

கடந்த 2018ஆம் ஆண்டு அதர்வா முரளி, நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மானஸ்வி.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி குழந்தை நட்சத்திரமாக உள்ள மானஸ்வி, சினிமாவில் யாருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார் என்பது பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு அதர்வா முரளி, நயன்தாரா, விஜய் சேதுபது, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மானஸ்வி. இவர் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் கொட்டாச்சியின் மகளாவார். அந்தப் படத்தைத் தொடர்ந்து மோகினி, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு, தர்பார், எனிமி, பரமபதம் விளையாட்டு, சித்திரை செவ்வானம், மாமனிதன், பட்டாம்பூச்சி, மஹா, தி லெஜண்ட் உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். 

இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:

Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்

கடைசியாக சந்தானம் ஹீரோவாக நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில்  நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பேய் வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மானஸ்வி, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம். குழந்தை நட்சத்திரமான அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் மானஸ்வி, தமிழ் சினிமாவில் யாருடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “ரஜினிகாந்த் அங்கிள் கூட ஹீரோயினாக நடிக்க ஆசையாக இருக்கிறேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவரிடம் கூட தெரிவித்து விட்டேன். கண்டிப்பாக உங்கள் படத்தில் ஹீரோயினாக நடிப்பேன் என சொல்லி விட்டேன்.

இதேபோல் கமல்ஹாசனுடன் நடிக்க ஆசை. எல்லாமே ஆசையாகவே இருக்கிறது. மேலும் விஜய், அஜித்துடன் நடிக்க ஆசை. முதலில் அவர்களின் மகளாக பண்ணிவிட்டு பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆசை” என மானஸ்வி கூறியுள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

ஏற்கெனவே மானஸ்வி, நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2020 ஆம் ஆண்டு வெளியான தர்பார் படத்தில் நடித்திருந்தார்.இப்படியான நிலையில் அவருக்கு ஹீரோயினாக நடிப்பேன் என கூறியதற்கு இணையவாசிகள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

வரிசைக்கட்டும் படங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை தொடர்ந்து ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் உடன் ரஜினி இணைந்து படம் பண்ண உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola