பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப்பும், நடிகர் விக்கி கௌஷலுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணம் ராஜாஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸஸ் ஃபோர்ட் ஹோட்டலில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திருமண நிகழ்வின் போது கத்ரீனா கைஃப் போடும் மெஹந்திக்கு ஆகும் செலவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


ஆமாம்.. கத்ரீனாவுக்கென்றே ஸ்பெஷலாக ஜோத்பூரில் உள்ள பாலி மாவட்டத்தில் இருந்து Sojat மெஹந்தி வரவழைக்கப்பட இருக்கிறதாம். உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த மெஹந்தியை செய்யும் நபர்கள் இதனை திருமண ஜோடிக்கு இலவசமாக வழங்க இருக்கிறார்கள். எந்த வித ரசாயனமும் கலக்கப்படாமல்முழுக்க முழுக்க இயற்கையான முறையில், கைகளால் மட்டுமே இந்த மெஹந்தி உருவாக்கப்படுகிறது. இந்த மெஹந்தி ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.






 


திருமணம் செய்துகொள்வதற்காக காத்திருக்கும் தம்பதிகளுக்கு விக்கி கௌஷல் சரியான திருமண வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘சர்தார் உதம்’ திரைப்படத்தின் நடிகர் விக்கி கௌஷல் ஜூஹூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்காக பெரும் தொகையை செலுத்தி உள்ளார். அந்த வீட்டிற்கு சென்றதும் இந்த புதிய ஜோடி விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் அண்டை வீட்டாராக மாறுவார்கள். விராட் மற்றும் அனுஷ்கா ஒரே கட்டிடத்தில் இரண்டு தளங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் பார்க்க: