தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு புரட்சியாக பார்க்கப்படுவது ஸ்மார்ட் வாட்ச். பல முன்னணி மற்றும் பிரபலமான மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய் பயனாளர்களை கவரும் வகையில் பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்த ஸ்மார்ட்போன் இன்றியமையாத ஒன்று. ஒரே நிறுவனத்திலான ஸ்மார்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்சினை பயன்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சூழலில் பிரபல சாம்சங் நிறுவனம் தான் அறிமுகப்பட்டுத்தியுள்ள இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சுகளை மொபைல் இல்லாமலும் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic என்னும் இரண்டு வகை ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் சற்று தாமதமாக அறிமுகமானாலும் , மேற்கண்ட ஸ்மாட் வாட்சுகள் Bluetooth-only மற்றும் LTE வசதி என்ற வசதிகளுடன் களமிறங்கியது. இதில் Bluetooth-only என்ற வசதியை பயன்படுத்துவதற்கு மொபைலின் ஸ்மார்ட் வாட்ச் செயலி தேவைப்படுகிறது. LTE வசதி மூலம் ஸ்மார்ட் வாட்ச் தனித்து செயல்பட முடியும். சரி எப்படி மொபைல் இல்லாமல் ஸ்மார்ட் வாட்சினை பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முதல் முறை இந்த வசதியின் மூலம் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை இயக்க விரும்பினால் , turn on செய்ய வேண்டும் அல்லது முன்பே வாட்சினை பயன்படுத்துபவராக இருந்தால் reset செய்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு தோன்றும் கேள்விக்குறி (?) ஐகானை கிளிக் செய்து , பிறகு ‘tap here' என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு அறிவிப்பு ஒன்று தோன்றும். அதனை கவனமாக படித்து பார்த்துவிட்டு ‘Continue' என்பதை கிளிக் செய்துக்கொள்ளுங்கள்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தோன்றும் அதனை படித்து பாருங்கள்..அதனை ஏற்றுக்கொண்டால் கீழே தோன்றும் ‘Next' என்னும் வசதியை கிளிக் செய்து முன்னேறுங்கள்.
இப்போது உங்களிடம் சாம்சங் கணக்கிற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் இருந்தால் அதனை பயன்படுத்துங்கள் , இல்லை என்றால் Skip என்னும் வசதியை தேர்வு செய்துக்கொள்ளலாம்.
அதன் பிறகு நீங்கள் இருக்கும் நாட்டின் நேரம் குறித்த விவரங்களை கொடுக்கப்பட்ட வசதியில் set செய்துக்கொள்ளுங்கள்
இப்போது உங்கள் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளை திரும்ப பெறுவதற்கான PIN ஒன்றை உருவாக்க கேட்கும். உங்கள் விருப்பப்படி அதையும் உருவாக்குங்கள்.
இப்போது உங்கள் வாட்ச் மொபைல் இல்லாமல் செயல்பட தயாராகிவிடும் . பின்னர் நீங்கள் மொபைலுடன் இணைக்க விரும்பினால் Settings > Connect to phone > ✔ என்னும் வசதிக்கு செல்லுங்கள். பின்னர் ஏற்கனவே பதிவு செய்த நான்கு இலக்க PIN நம்பரை பதிவு செய்து மொபைலுடன் பயன்படுத்த தொடங்கலாம்.
மொபைல் இல்லாமல் Samsung Galaxy Watch 4 மற்றும் Samsung Galaxy Watch 4 Classic வாட்சினை உடற்பயிற்சி செய்தல், மலையேறுதல் போன்ற வெளிப்புற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் மொபைலுடன் இணைத்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் சில வசதிகள் இம்முறை பயன்படுத்தலின் பொழுது கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.