சென்னை 600028 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் வெங்கட் பிரபு அப்படத்தின் மூலம் தனக்கு மட்டும் விசிட்டிங் கார்டு போட்டு கொள்ளாமல் தனது படத்தில் நடித்த அனைவருக்கும் ஒரு நல்ல ஓப்பனிங்கை பெற்று கொடுத்தார். அந்த நட்பையும் கிரிக்கெட்டையும் கைவிடாது மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒரு கதைக்களத்தோடு செகண்ட் இன்னிங்க்ஸை அதே டீமோடு கொண்டு வந்து விளையாடியவர். 


 



 


தொடரும் கிரிக்கெட் :


ஒரு கிரிக்கெட் விளையாட்டில் ஜெயிப்பதற்காக விளையாட்டாக செய்யும் காரியம் ஒருவரின் திருமணத்தையே கேள்விக்குறியாக்குகிறது. நண்பர்களின் உதவியால் தடை பட்ட அந்த திருமணம் நடந்தேறியதா என்பது தான் 600028 பார்ட் 2 படத்தின் கதை. முதல் பாகத்தில் இளசுகளாக சுற்றி வந்தவர்கள் எல்லோரும் திருமணம் முடிந்து, வேலை, குழந்தை  குட்டி என செட்டிலான பிறகும் கிரிக்கெட்டை விடாமல் தொடர்ந்து வருகிறார்கள். 


 






 


ஆடிய கால்கள் அடங்குமா ?


ஷார்க்ஸ் டீமில் இருந்த அனைவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் பேச்சுலர்களாக இருக்கும் இரண்டு மகான்களாக பிரேம்ஜி மற்றும் ஜெய். ஒரு வழியாக பெற்றோரின் சம்மதத்துடன் காதலியை கை பிடிக்க இருக்கும் ஜெய், திருமண விழா மூலம் மீண்டும் ஒன்று சேர்கிறது ஷார்க்ஸ் அணி. வந்த இடத்தில் அரவிந்த் ஆகாஷை சந்திக்கிறது இந்த கூட்டணி.


அங்கு கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் அரவிந்த் ஆகாஷ் தனக்கு சவாலாக இருக்கும் எதிர் அணியான வைபவ் அணியுடன் போட்டியிட தயாராகி குஜாலாகிவிடுகிறார்கள். சூழ்ச்சி செய்து ஜெய் திருமணத்தை நிறுத்துகிறது வைபவ் அணி. நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் மேட்ச் ஜெயித்தார்களா, தடைபட்ட திருமணம் நடைபெற்றதா என்பதை கழட்ட கலந்து மிகவும் ஜாலியாக நகர்த்தப்பட்டது. 


ஏராளமான சிறப்பு :


என்னதான் காமெடி, கலாட்டா எல்லாம் இருந்தாலும் முதல் பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு இந்த பார்ட்டிற்கு அந்த அளவிற்கு கிடைக்கவில்லை. கேரக்டர்கள் அனைத்தும் எந்த வித மாறுதலும் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு பிறகும் மேட்ச் செய்யப்பட்டது சிறப்பு. மிர்ச்சி சிவா இப்படத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படத்தில் காமெடி சற்று தூக்கலாகவே இருந்தது. ஷார்க்ஸ் அணியின் மனைவிகளாக வரும் அனைவருமே மிகவும் கூலாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கும் பக்கபலமாய் அமைந்து இருந்தது யுவனின் இசை. படம் முழுக்க முழுக்க எண்டர்டெயின்மெண்ட் நிறைந்து இருந்து ரசிகர்களை கவர்ந்தது. 


 






 


நாஸ்டாலஜிக் மொமெண்ட் :


அனைத்திற்கும் மேல் ஜெய், சிவா, நித்தின் சத்யா, விஜய் வசந்த் என அந்த பழைய டீமை மீண்டும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய சவால். அதே ஒற்றுமை எந்த ஒரு காம்ப்ரமைஸூம் இல்லாத நடிப்பு என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது வெங்கட் பிரபுவின் இந்த ரீ யூனியன் திரைப்படம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை கவர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி விசிலடித்து முதல் பார்ட்டை ரசித்தார்களோ அதே போல் அந்த நினைவுகளோடு தி பாய்ஸ் ஆர் பேக் என இந்த பார்ட்டையும் என்ஜாய் செய்தார்கள் ரசிகர்கள்.