மாண்டஸ் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது புயலாக வழு இழந்தது. இன்று நள்ளிரவு தொடங்கி புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்திற்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.


தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர புயல் "Mandous" புயலாக வலு இழந்துள்ளது - வானிலை ஆய்வு மையம் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்


தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர புயல் "Mandous" புயலாக வலு இழந்துள்ளது. இது கடந்த 06 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. 


இது மேலும் காரைக்காலில் இருந்து கிழக்கு - வட கிழக்கு திசையில் 180 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கே சுமார் 260 கி.மீ.  தொலைவில் நிலை கொண்டுள்ளது. 


இன்று நள்ளிரவு தொடங்கி புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மகாபலிபுரத்திற்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது கிட்டத்தட்ட வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தைச் சுற்றி ஒரு சூறாவளி புயலாக இன்று நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 


09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


மீனவர்கள் எச்சரிக்கை ; 


இன்று மற்றும் நாளை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைகள் மற்றும் மன்னார் வளைகுடா, இலங்கைக் கடற்கரையை ஒட்டி பகுதிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்