இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலை போகாமல் பாதுகாக்க சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்த கட்சி வேகமாக செயல்பட்டது. ஒரு வழியாக எண்ணிக்கை சீரான நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் கவனம் திரும்பியது. கட்சியில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொண்ட நிலையில் இப்போது, ​​யார் முதல்வராக இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதும், பிளவுகளைத் தடுப்பதும் பெரும் சவாலாக இருக்கும். இதனால் இமாச்சல் அரசியல் வட்டாரத்தில் பின்வரும் பெயர்கள் முதல்வர்களாக வாய்ப்புண்டு என்று தகவல்கள் சுற்றி வருகின்றன.



  1. சுக்விந்தர் சிங் சுக்கு


மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரான சுக்கு, ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் தொகுதியில் வென்றுள்ளார். இந்தத் தொகுதியில் அவர் பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். 58 வயதான அவர் உயர் பதவிக்கான வலுவான வேட்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.




  1. முகேஷ் அக்னிஹோத்ரி


உனா மாவட்டத்தில் உள்ள ஹரோலி தொகுதியில் இருந்து வந்துள்ள முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அக்னிஹோத்ரி அதே தொகுதியில் நின்று வென்றுள்ளார். அவர் அந்த தொகுதியில் நல்ல பெயருடன் இருப்பதாக குயின்ட் செய்தி நிறுவனம் எடுத்த கருத்துக்கேட்பு தெரிவிக்கிறது. கோவிட்-19 லாக்டவுனின் போது அவர் நிறைய உள்கட்டமைப்புப் பணிகளைச் செய்ததாகவும் மக்களுக்கு உதவியதாகவும் வாக்காளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், அவர் ஒரு பிராமணர் என்பது ஒரு பின்னடைவு என்று கூறுகிறார்கள். ஹிமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை ஒரே ஒரு பிராமண முதல்வர் மட்டுமே இருந்துள்ளார், பாஜகவின் சாந்த குமார். மற்ற அனைத்து முதல்வர்களும் தாக்கூர் என்று கூறுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்: Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்..



  1. சுதிர் ஷர்மா


15 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டமான காங்க்ராவில் இருந்து ஒருவர் முதல்வர் பதவியேற்க வேண்டும் என்று ஹிமாச்சல் காங்கிரஸின் ஒரு பிரிவினருக்குள்ளேயே கருத்து நிலவுகிறது. தரம்ஷாலா எம்எல்ஏ சுதிர் சர்மா பரிசீலிக்கப்படலாம். காங்க்ரா மாவட்டத்தில் கட்சி தனது நிலையை உறுதிப்படுத்த விரும்புகிறது. இது 2017 இல் தர்மஷாலா ஹிமாச்சலின் இரண்டாவது தலைநகராக மாறியது குறிப்பிடத்தக்கது.




  1. பிரதிபா சிங்


இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கேப்டனாக மண்டி எம்பியும், ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பிரதீபா சிங் இருந்தார். கட்சி மாநிலத்தில் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்வதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியான அவருக்கும் அவரது மகன் விக்ரமாதித்ய சிங்கிற்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் மனைவி எம்.எல்.ஏ அல்ல, எனவே ஒரு எம்.எல்.ஏ தனது இருக்கையை காலி செய்தால் மட்டுமே, அவரால் சட்டசபைக்குள் நுழைய முடியும். அவரது மகன் சிம்லா ரூரல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் ஹிமாச்சல் மக்கள் வீரபத்திர சிங்கின் குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வரை எதிர்பார்க்கலாம். ஆனால் முதல்வராவது அவர் அனுபவத்திற்கு கொஞ்சம் அதிகமாக தெரியலாம். பிசிசி தலைவராக இருப்பதால், மற்ற தலைவர்களை விட பிரதீபா சிங்கிற்கு அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. மேலும், அவர் மண்டி எம்பி பதவியை ராஜினாமா செய்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் ரிஸ்கை காங்கிரஸ் எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.