Friday Movie Release Tamil, Sep 24: கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பல மாதங்களாக மூடிக்கிடந்த திரையரங்குகள் கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டன. ஆனால் இப்போது தான் புதுப்படங்களில் வரத்து தொடங்கியுள்ளது. அதேவேளையில் ஓடிடியிலும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கோலிவுட் 5 திரைப்படங்களை களம் இறக்குகிறது. அவை என்னென்ன?
1.ப்ளான் பண்ணி பன்னணும்ரியோராஜ், ரம்யா நம்பீசன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ப்ளான் பண்ணி பண்ணனும். வட சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் பொறியாளராக ரியோவும், சிறு நகரத்தில் இருந்து வரும் பெண்ணாக ரம்யாவும் நடித்துள்ளனர். ரம்யாவும் ஐடி வேலை பார்ப்பதாகவே இருக்கிறது. இந்தப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
2.சின்ரல்லா
இதையும் படிங்க > >அஜித்திற்கு உலகம் சுற்ற ஐடியா கொடுத்த பெண்... யார் இந்த மரல் யாசர்லூ?
3.சூ மந்திரகாளிஈஸ்வர் கொற்றவை எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சூ மந்திரகாளி. சேலம் மாவட்டத்தின் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவமாக இப்படம் நகர்கிறது. காமெடி கலந்த திகில் அனுபவமாக இது இருக்குமென கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா, கிஷோர் தேவ், கோவிந்த் மயோன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
4.பேய் மாமா
5.சின்னஞ்சிறு கிளியேசபரிநாதன் முத்துபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. செந்தில்நாதன், சந்த்ரா நாயர், அர்ச்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேற்கத்திய மருத்துவம் மற்றும் கல்வியில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தும் அதே வேளையில் இந்திய மருத்துவம் மற்றும் கல்வியின் பெருமையை மீட்டெடுப்பது குறித்து பேசும் கதையாக இது இருக்குமென தெரிகிறது
இதையும் படிங்க > >PM Modi US Visit: இது மோடியின் விமானம்.. அதுவே அதன் பிரதானம்!