777 சார்லீ


கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 777 சார்லீ . ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடித்த இப்படத்தில் சார்லீ என்கிற நாய் ஒன்றும் நடித்திருந்தது. தனது வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்த ஒரு மனிதன் ஒரு நாயின் வருகையின் வருகை அவனது வாழ்க்கையை எப்படி உயிர்ப்புள்ளதாக மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதை.


திரையரங்கில் வெளியாகிய இப்படம் பார்வையாளர்கள் அனைவரையும் கண் கலங்கியபடி வீடு திரும்ப வைத்தது. முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் இப்படத்தைப் பார்த்து இறந்த தனது சொந்த நாய்குட்டியை நினைத்து திரையரங்கத்தில் கண்கலங்கி அழுத நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.


பெரியவர்கள் முதல் குழந்தைகள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கடந்த ஆண்டு அறிவிக்கப் பட்டது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மகிழ்ச்சிகரமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்கள் சார்லீ படத்தின் படக்குழுவினர்.


ஆறு குட்டிகளுக்கு தாயான சார்லீ






எக்கச்சக்க மனங்களை கொள்ளை கொண்ட சார்லீ நாய்குட்டி கடந்த சில தினங்கள் முன்பே ஆறு குட்டிகளுக்கு தாயாகியுள்ளது. இந்த தகவல் தெரிய வந்ததும் அதை நேரில் பார்க்க நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மைசூருக்கு கிளம்பிச் சென்றுள்ளார். சார்லீயுடன் ரக்‌ஷித் ஷெட்டி கொஞ்சி விளையாடுவது இன்னும் கண்களை கூட திறக்காத நிலையில் இருக்கும் இளம் குட்டிகளை தனது கையில் ஏந்தியபடியும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் .


சார்லீ படத்திற்கு ஆதரவு தெரிவித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரிடமும் இந்த தகவலை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தான் விருப்பப் பட்டதாக ரக்‌ஷித் ஷேடி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




மேலும் படிக்க : Vijayan 17th Death Anniversary: ஹீரோ, வில்லன் எதுவானாலும் அவர் லெஜெண்ட்... விஜயன் இறந்த தினம் இன்று...


Siragadikka Aasai: ரோகிணி போடும் திட்டம்.. வீட்டில் வெடிக்கப்போகும் பிரச்சினை.. சிறகடிக்க ஆசை அப்டேட்..