Chandramuki Bommi : குட்டி பேபியா இருந்த பொம்மிக்கு இப்போ ஒரு பேபி வந்தாச்சு...சந்திரமுகி பொம்மி லேட்டஸ்ட் போஸ்ட் 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பல பிளாக் பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. 2015ம் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. 


பி. வாசு இயக்கிய இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு, வினீத், மாளவிகா என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்த இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் சந்திரமுகி திரைப்படத்தில்  வந்த குட்டி பெண்ணை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த குட்டி பாப்பாவின் பெயர் பிரகர்ஷிதா.  மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி நடித்த "மணிச்சித்திரதாஷ்" என்ற திரைப்படத்தின் தழுவலாக உருவான திரைப்படம் "சந்திரமுகி".  



தொலைக்காட்சியில் பிரகர்ஷிதாவின் பயணம் : 


பிரகர்ஷிதா பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். "வேலன்" என்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில் வேலாயி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த அமுல் பேபி. கொழுகொழுவென இருக்கும் இந்த வட்ட முகம் கொண்ட குழந்தை அந்த சமயத்தில் அனைவரின் ஃபேவரட். மற்றுமொரு தொடரான "ராஜராஜேஸ்வரி" என்ற தொடரிலும் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு சில படங்களிலும் நடித்துள்ளார் பேபி பிரகர்ஷிதா.


 






பேபி இப்போ மம்மி :


இந்த குட்டி பெண் நன்றாக வளர்ந்து திருமணம் முடிந்து ஒரு குட்டி பாபாவிற்கு தாயாகிவிட்டார் நம்ம "அத்திந்தோம்..." பொம்மி. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இவருக்கும் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாம். தற்போது ஒரு குழந்தைக்கும் தாயாகி விட்ட பிரகர்ஷிதா தனது குடும்பத்தின் எடுத்து கொண்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அப்போ பேபியா இருந்த பொண்ணு இப்போ மம்மியா ஆயிட்டாங்க என்று ஆச்சரியத்துடன் வாழ்த்தி வருகிறார்கள். 


 






 


சந்திரமுகி 2 ரெடியாகிறது:


பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரென்ஸ், அனுஷ்கா ஷெட்டி, வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.