திருவண்ணாமலையில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26ம் தேதி நடைபெறுகிறது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26 தேதி நடைபெறுகிறது.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இன்றி உள்ள இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகையான இளைஞர்களுக்கும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருவது வழக்கமாகும்.

 


இந்நிலையில் அதன்படி வருகின்ற (26.08.2022) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்தமுகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னனி மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக்காண காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொள்ள தகுதியான இளைஞர்கள் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்று வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

TTD Job: திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்? கடைசி தேதி என்ன? முழு விவரம்!

 


வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றும் அன்று வேலைக்காக வரும் இளைஞர்கள் தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று. கல்வி தகுதி சான்றிதழ்கள் என அனைத்து நகலுடன் எடுத்துகொண்டு முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்களின் வேலைக்காக பதிவு செய்யலாம். மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்து எதாவது சந்தேகங்கள் இளைஞர்களுக்கு ஏற்பட்டால் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது.

Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Continues below advertisement
Sponsored Links by Taboola