நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சந்திரமுகி படம்
தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையைப் பெற்ற சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 800 நாட்களுக்கும் மேல் ஓடிய இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார். அது இப்போது சாத்தியமாகியுள்ளது.
சந்திரமுகி 2
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார். நடிகையாக கங்கனா ரனாவத் நடிக்க, வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், ராதிகா உள்ளிட்ட பலரும் 'சந்திரமுகி 2' படத்தில் இணைந்துள்ளனர். மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 19 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் டப்பிங்கை ராகவா லாரன்ஸ் நிறைவு செய்து விட்டார். இப்படத்திற்கான பின்னணி இசை கோர்க்கும் பணியை இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி, நாளை முதல் தொடங்குகிறார் என்றும், இப்படத்தின் இசை வெளியீடு மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணியாற்றுகிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
மேலும் படிக்க: Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!