பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சந்திரமுகி 2 , இறைவன் படம் நேற்று வெளியான 2 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் பற்றி காணலாம். 


சந்திரமுகி 2 படம்


கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. கிட்டதட்ட 18 ஆண்டுகள் கழித்து இதன் 2 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பி.வாசு. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், ராதிகா, மகிமா நம்பியார், வடிவேலு, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் நேற்று (செப்டம்பர் 28) இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய  மொழிகளில் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. 


இறைவன் படம் 


இதேபோல் நேற்றைய தினம் ஜெயம் ரவி  நடித்த ‘இறைவன்’ படம் வெளியானது. நடப்பாண்டில் பொன்னியின் செல்வன் தவிர்த்து ஜெயம் ரவி நடித்த அகிலன் படம் தோல்வியை தழுவியது. இதனால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய ஐ.அஹமது இப்படத்தை இயக்கிய நிலையில் நயன்தாரா, விஜயலட்சுமி, நரேன், ராகுல் போஸ், வினோத் கிஷன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் மிக மோசமான விமர்சனங்களை இறைவன் படம் எதிர்கொண்டுள்ளது. 


ஏ சர்ட்டிஃபிகேட் பெற்ற இப்படத்தில் மிகுந்த வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இப்படி ஒரு படத்தை ஐ.அஹமது, ஜெயம் ரவி கூட்டணியில் இருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள்


இந்நிலையில் இரண்டு படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சந்திரமுகி படம் முதல் நாளில் ரூ.7.50 கோடி வசூல் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதேபோல் இறைவன் படம் முதல் நாளில் ரூ.2.50 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி வரை விடுமுறை வருவதால் வசூல் நிலவரம் மாறும் என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதேபோல் சித்தார்த் நடித்துள்ள சித்தா படமும் முதல் நாளில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளதால் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க:  Tamil Cinema: பெண்கள் பலவீனமானவர்களா?.. இறைவன் படத்துக்கு எழும் எதிர்ப்பு.. எதை நோக்கி செல்கிறது தமிழ் சினிமா?


Chandramukhi 2 Review: வேட்டையன் கேரக்டரில் ட்விஸ்ட் வைத்த பி.வாசு.. சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!