சமீப காலமாகவேபிரபலங்கள் , குறிப்பாக இந்திய திரை பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் டி-ஷெர்ட் அணிவது வழக்கமாக இருக்கிறது. ஷாருக்கான் , ஜாக்குலின், கிரிக்கெட் பிளேயர் தோனி, அல்லு அர்ஜூன் இப்போ நம்ம சிவக்கார்த்திகேயன்னு அந்த பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது. balmain அப்படினு சொல்லக்கூடிய இந்த பிராண்டை அணிவதை பிரபலங்கள் அவ்வளவு பெருமையாக நினைக்கிறார்களே. அதில் என்னதான் இருக்கிறது. நாமலும் வாங்கி பார்க்கலாமே என பார்த்தால்...விலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லைங்க.
அந்த பிராண்டில் ஒரு டி-ஷர்ட் வாங்க ரூ. 22,500 என்பதுதான் குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலே இருக்கும் புகைப்படத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் அணிந்திருக்கிறார் இல்லையா ஸ்லீவ் லெஸ் டி-ஷெர்ட் அதன் விலை 26,000 ரூபாய் மட்டுமே. தோனி அணிந்திருக்கும் டி-ஷெர்ட் விலை 37,744 ரூபாய். அல்லு அர்ஜூன் கருப்பு நிறத்தில் ஒரு டி-ஷெட்ர் அணிய விரும்பினாலே balmain தான் அணிவார் போலும் , எக்கச்சக்க கலெக்ஷன்ஸை கைவசம் வைத்திருக்கிறார். நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் balmain டி-ஷெர்ட் விலை ஜெஸ்ட் ரூ.42,000 மட்டும்தான்.
இந்த டி-ஷெர்டை பிரபலங்கள் கேஷுவலாக அணிந்து வெளியில் செல்வதை ஒரு pride ஆக பார்க்கிறார்கள். எல்லாமே வியாபார யுக்திதாங்க. இந்த நிறுவனத்தின் டார்கெட் என்பது சாமானியர்கள் கிடையாது. மாறாக பிரபலங்கள்தான். உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலங்களாக இருக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்து , அவர்களின் டேஸ்டிற்கு ஏற்ப ஆடைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. தங்களது நிறுவன பிராண்டுகளை எந்த விலையில் , எந்த ஸ்டார் அணிகிறார் என்பதை கண்காணிக்க balmain நிறுவனத்தில் தனி குழு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! balmain paris என்பதுதான் இந்த பிராண்டின் முழுமையான பெயர். ஹாலிவுட் பிரபலங்களுக்கு இந்த பிராண்ட் ஃபேவெரெட். இந்த பிராண்டிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தக இணையதளத்தில் அதிக அளவிலான கலெக்ஷன்ஸை விற்பனை செய்கிறது. balmain நிறுவனம் 1945 ஆம் ஆண்டிலிருந்தே இயங்கி வரும் பழமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை Pierre Balmain என்பவர் தனது பெயரிலேயே தொடங்கியிருக்கிறார்.இந்த நிறுவனம் தற்போது ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆடை மட்டுமல்ல ஷூ, பேக் ,தொப்பி என அனைத்து செலெபிரட்டி டார்கெட் கலெக்ஷன்ஷும் இந்த இணையதளத்தில் கிடைக்கிறது.