Assembly Election Results 2022: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
உத்தரக்காண்ட் மாநிலத்திலுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்