இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாநாடு. படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் படத்தின் தயாரிப்பாளர் படம் வெளியாகாது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் மாநாடு படம் வெளியாகி மக்களிடமும், பிரபலங்களிடமும் ஏகோபித்த வரவேற்பை பெற்ற வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் மாநாடு படம் குறித்து பதிவிட்ட பதிவுகளை பார்க்கலாம்.