Bigg Boss 5 Tamil Day 53: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் அபினய், வருண், தாமரை, இமான், அக்ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அபினய், இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Maanaadu Review : ’வந்தான், வென்றான், சிம்பு’ மாநாடு படம் எப்படி இருக்கு..?
அதனை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான நாமினெச்ஷன் நடைபெற்றது. அதற்கு முன்பு, தலைவராகும் தகுதி தாமரைக்கு இல்லை என ப்ரியங்கா அவரை வம்பிழுக்க, வீடே இரண்டானது. அடுத்து நாமினேஷன் நடைபெற்றது. இதில், ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோர் நாமினேட்டாகினர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் விளையாடிய கனா காணும் காலங்கள் டாஸ்க் இன்றுடன் நிறைவு பெற்றது. டாஸ்க் முடிவில், போட்டியளர் ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தினருக்கு லெட்டர் எழுதி அதை வாசித்து காட்டினர். அதனை தொடர்ந்து, இந்த வாரம் புதிய ஒரு போட்டியாளரை வீட்டிற்குள் அனுப்பி இருக்கிறது பிக் பாஸ் குழு. பெரிய திரை, சின்னத்திரை நடிகரும், விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். வெளியில் இருந்து உள்ளே சென்றிருப்பதால், வீட்டில் உள்ள போட்டியாளர்களை பற்றி இன்று ரிவ்யூ சொல்கிறார் அவர். பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் என்பதால், இனிதான் வீட்டிற்குள் சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கும் என தெரிகிறது. வீட்டுக்கு வந்தவரிடம், பிக் பாஸ் போட்டியாளர்கள், “விஜய் பிக் பாஸ் பார்ப்பாரா?” என அடுக்காக கேள்விகளை கேட்டனர். இனி வரும் வாரங்களில் போட்டி டஃப் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.
ப்ரொமோ:3
ப்ரொமோ:2
ப்ரொமோ:1
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்