சினிமாத்துறையை பொறுத்தவரை பிற துறைகளை சார்ந்த பலரும் இந்த கலையுலகில் களமிறங்கி கலக்கியுள்ளார். கண்டக்டர் ஒருவர் கடின உழைப்பினால் இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார் என்றால் அது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. அதேபோல பல நடிகர்கள், நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பு பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் அவர்களுக்கு துபாயில் ஐ.டி துறையில் பணியாற்றிய நிலையில் திரையுலகிற்கு அறிமுகமானார்.
துல்கர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கடந்த 2012ம் ஆண்டு நாயகனாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே தனது நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவரத்தொடங்கினர் துல்கர். பாலாஜி மோகன் அவர்களுக்கு தான் துல்கரை தமிழில் அறிமுகம் செய்த பெருமை உண்டு. 2014ம் ஆண்டு வெளியான "வாயை முடி பேசவும்" என்ற படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

The con is coming and you do not want to miss it. Catch the teaser of Kurup on March 26th!@dulquer @srinatkp @sobhitaD @Indrajith_s @sunnywayn @kurupmovie @dqswayfarerfilm #കുറുപ്പ് #குருப் #కురుప్ #ಕುರುಪ್ #कुरुपु #Kurup #KurupTeaserOnMarch26 #KurupTeaser #KurupMovie pic.twitter.com/ZK4pamuqVU
— dulquer salmaan (@dulQuer) March 21, 2021

அண்மையில் புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் வேற லெவலில் ஹிட்டானதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனராக மாறியுள்ள மாஸ்டர் பிருந்தா இயக்கத்தில் வெளியாக உள்ள ஹே சினாமிக்கா படத்தில் துல்கர் நடித்துள்ள நிலையில் குருப் என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சுகுமாரா குருப் என்ற குற்றவாளி ஒருவரின் வாழ்கை வரலாறு படமாக இப்படம் உருவாகி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் துல்கர் அந்த குற்றவாளியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் 4 மொழிகளில் வரும் 26ம் தேதி வெளியாகவுள்ளது.