ஷாருக்கானின் மனைவியும் வடிவமைப்பாளருமான கவுரி கான் மீது லக்னோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கௌரி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மும்பையைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஷா என்பவர் புகார் அளித்துள்ளார். கவுரி கான் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நிறுவனம் ரூ. 86 லட்சம் பெற்றும் ஃப்ளாட்டைக் ஒப்படைக்கத் தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ஃப் வியூவில் அமைந்துள்ள பிளாட் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் அளித்த புகாரில் கவுரி கானின் பேர் மட்டுமல்லாமல் அனில் குமார் துளசியானி மற்றும் துளசியானி கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் மகேஷ் துளசியானி பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.  


மேலும் அந்த புகாரில் பிராண்ட் அம்பாசிடர் கௌரி கானின் பரிந்துரையின் பேரில் இந்த பிளாட் வாங்கியதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார். 






கௌரி கான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி மற்றும் தொழில் ரீதியாக ஒரு வடிவமைப்பாளர் ஆவார். அவர் அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வடிவமைப்புகளின் படங்களையும் வீடியோக்களையும் பகிர்வது வழக்கமாகும். 






பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கத்ரீனா கைஃப், மலாய்க்கா அரோரா ஆகியோரின் வீடுகளின் உள்கட்டமைப்பை வடிவமைத்தவர் கவுரி கான். அவரின் வடிவமைப்புகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை மேலும் பலரால் பாராட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் கவுரி கான், ஷாருக்கானின் மேலாளர் பூஜா டட்லானி வீட்டின் உள்கட்டமைப்பை வடிவமைத்தார். பூஜா டட்லானி இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த பதிவில், ” ஒரு வீட்டை வீடாக மாற்றியுள்ளார். இந்த வீடிற்கு வசதியும் வசீகரமும் வடிவமைப்பாளர் கவுரி கான் சேர்த்துள்ளார் #கவுரிகாண்டிசைன்ஸ்" என குறிப்பிட்டுள்ளார்.  இந்த பதிவிற்கு ஷாரூக்கான் கமெண்ட் செய்துள்ளார்.