இயக்குநர் சுந்தர் வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட இருக்கிறார். தற்போது மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்மீது பணமோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த கலகலப்பு 3 ஆம் பாகத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ரூ 50 லட்சம் முன்பணம் வாங்கிவிட்டு குறிப்பிட்ட தேதியில் படத்தை தொடங்கவில்லை என்றும் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர மறுத்துவருவதாகவும் தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் சென்னை காவல் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுந்தர் சி அதிமுக சார்பாக புதிய நீதி கட்சி வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட இருக்கிறார். திமுக சார்பாக பிடிஆர் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் தீவிர பிரச்சாம் மேற்கொண்டு வரும் சுந்தர் சி மக்களை நேரடியாக சந்தித்து கவனமீர்த்து வருகிறார்.
மோசடி புகார்
தயாரிப்பாளர் மணிகண்ட ராமன் அளித்த புகாரில் " கலகலப்பு படத்திற்காக சுந்தர் சி யை அனுகினே. மொத்த படத்தின் பட்ஜெட் ரூ 20 கோடி தனது சம்பளம் ரூ 5கோடி என்று கூடி படத்தை இயக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இப்படியான நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதும் கலகலப்பு படத்தின் பட்ஜெட்டை ரூ 20 கோடியாக உயர்த்தி சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தினார். பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படிக்கைக்கு வர முடியாததால் படத்தை எடுக்க வேண்டாம் என்று பின்வாங்கினோம். ஆனால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டால் அதை தராமல் மிரட்டி வருகிறார் சுந்தர் சி. இதனால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறியுள்ளார்.
200 கோடி ஊழல்
மதுரையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சுந்தர் சி இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் ரூ 200 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். " குண்டு குழியுமான சாலைகள் , சாலையோர கழிவுநீர் , மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லை. வைகை ஆறு குப்பை ஆறாக மாறிக்கொண்டிருக்கிறது. இதை எல்லாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் பார்க்கக் கூடிய உண்மைகள் தான். மதுரைக்கு செய்ய வேண்டிய அடிபடையான விஷயங்களை செய்யவில்லை. இதையெல்லாம் நான் கேட்டால் வெளியாட்கள் என்று சொல்கிறார்கள். உள்ளூர் காரர்களாக இருந்து என்ன செய்தார்கள். " என பிடிஆர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் சுந்தர் சி . தேர்தல் பிரச்சாரத்தில் தனது கருத்துக்களுக்காக பாராட்டுக்களைப் பெற்று வந்த சுந்தர் சி மீது சென்னை காவள் ஆணையத்தில் பண மோசடி புகாரளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
