Continues below advertisement

திருப்பத்தூர் அருகே பெற்றோர் தனது மகனை திட்டி வேலைக்கு போக மாட்டியா? எனக் கேட்டதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன், அவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு  நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் கடைசி மகன் விஷ்ணு வயது (26). இவர் பெங்களூரில் பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்தவர், இதுவரை வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி திரிந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இந்த நிலையில் பெற்றோர் நேற்று ஊதரியாக சுத்தி திரிகிறாயே வேலைக்கு போக மாட்டியா? வேலைக்கு போட என கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஷ்ணு  நேற்று இரவு தூங்க செல்வதாக கூறி யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

பின்னர் இன்று காலை நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அவருடைய தாயார் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.மகனின் உடலை பார்த்து கத்தி கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர் மகனை வேலைக்கு போடா என்று கூறிய நிலையில் அதனை புரிந்து கொள்ளாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)