‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடித்து முடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் இன்னும் சில நாள்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பட வெளியீட்டுக்கு வெறும் இரண்டு மாத கால இடைவெளியே உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள், பாடல் வெளியீடு ஆகியவை குறித்த பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் இசை தொடங்குவதற்கு அமைதியாகக் காத்திருங்கள் என்ற அறிவிப்புடன், லெனின் போஸ்டர் கம்யூனிஸ்ட் சின்னம் ஆகியவை பின்னணியில் இருக்க, உடுக்கையை கையில் ஏந்தியபடி தனுஷ் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், முதல் பாடல் பற்றிய அறிவிப்பும் தனுஷின் இந்த வித்தியாசமான போஸ்டரும் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.