உலகக் கோப்பை 2023ல் மும்பையில் உள்ல வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் குயிண்டன் டி காக் சதத்தை அடித்ததன் மூலம் இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். 


முதல் தென்னாப்பிரிக்க வீரர்: 


32 வயதாக தென்னாப்பிரிக்க வீரர் இலங்கைக்கு எதிராக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்திலும் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்திருந்தார். இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே பதிப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த ஆறாவது வீரரும், முதல் தென்னாப்பிரிக்க வீரரும் என்ற சாதனையை படைத்தார். 


முன்னதாக, கடந்த 2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா கடந்த 2015 உலகக் கோப்பையில் 4 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், மார்க் வா கடந்த 1996 உலகக் கோப்பையில் 3 சதம் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 






தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர் மேஹ்யூ ஹெய்டன் 2007 உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்து 4வது இடத்திலும், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி 2003 உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்து 5வது இடத்தில் உள்ளனர். தற்போது இந்த தனித்துவமான பட்டியலில் டி காக்கும் இணைந்தார். 


யாரும் நம்ப முடியாத வகையில், கடந்த 2015 மற்றும் 2019 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள டிக் காக் ஒரு முறை கூட சதம் அடிக்கவில்லை. இன்று வங்கதேச அணிக்கு எதிராக சதம் அடித்தன்மூலம் ஒருநாள் போட்டியில் தனது 20வது சதத்தை பூர்த்தி செய்தார். 


2023 உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக போட்டி தொடங்கும் முன்பே குயிண்டன் டி காக் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 2022 ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருந்து விலகிய டி காக், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணிக்காக டி20 போட்டியில் மட்டுமே விளையாடுவார். 


16 ஆண்டுகால சாதனை முறியடிப்பு:


2007ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் எடுத்த 149 ரன்களை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் விக்கெட் கீப்பருக்கான டி காய் அதிகபட்ச ஸ்கோராக 174 ரன்களை எடுத்து குவிண்டன் டி காக் அவுட்டானார்.






தென்னாப்பிரிக்கா அணி எப்படி விளையாடுகிறது..?


நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தாலும், இதுவரை இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக மாபெரும் வெற்றிகளுடன் தென்னாப்ப்ரிக்கா உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.