Captain Miller: மொத்தமாக மூன்று பாகங்கள் கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் மொத்தமிருந்த 125 நாட்களில் 75 நாட்களை சண்டை காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக படத்தின் இயக்குநர்  அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் உருவாகி பொங்கல் கொண்டாட்டமாக வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ளது. படம் ரிலீசாக சில நாட்களே உள்ள நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ”கேப்டன் மில்லர் படம் 3 பாகங்களை கொண்டது. பொங்கலுக்கு ரிலீசாக இருப்பது இரண்டாவது பாகம். அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கேப்டன் மில்லர் படத்தின் முதல் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கப்படும்.

 

பீரியாடிக் ஜானரில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் 5 சதவீதம் மட்டுமே நாங்கள் வைத்த லைட் செட்டிங். மீதி எல்லாமே இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான். அதையே பயன்படுத்தி கொண்டுள்ளோம். கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கிற்காக 125 நாட்கள் செலவிடப்பட்டது. அதில் 75 நாட்களுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வந்தார். படத்தின் ஒரு இடத்தில் சுமார் 1000 நபர்கள் ஒன்றாக இணைந்து சண்டையிடும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த சண்டை காட்சி தான் படத்தின் ஹைலைட்” என பேசியுள்ளார். 





 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது

 

ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். தனது இயக்கத்தின் மூலமும், வித்யாசமான படைப்பின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தின் மூலம் புதுவித அனுபவத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.