மார்வெல் ரசிகர்களின் மிகவும் பிடித்த கேப்டன் அமெரிக்க கதாப்பாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ் எவன்ஸ் தந்தையாகியுள்ளார். 

Continues below advertisement

குட்டி கேப்டன் அமெரிக்கா:

கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஆல்பா பாப்டிஸ்டா தம்பதியினர் இதுவரை தங்கள் குழந்தை பிறந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், குழந்தை கடந்த சனிக்கிழமை மாசசூசெட்ஸில் பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் பாலினம் மற்றும் பெயர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கிறிஸ் மற்றும் ஆல்பா தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் பரவத் தொடங்கியிருந்தன. ஆல்பா பாப்டிஸ்டா தந்தையான லூயிஸ் பாப்டிஸ்டா, தந்தையர் தினத்தன்று கிறிஸின் தந்தைக்கும் வாழ்த்து தெரிவித்த ஒரு ரசிகர் பதிவிற்கு “மிக்க நன்றி கிறிஸ். உங்கள் முறை வருகிறது!” என்று கருத்து பதிவு செய்தது, இந்த செய்திக்கு மேலும் உறுதிப்படுத்தலாக அமைந்தது.

Continues below advertisement

திருமணம் மற்றும் காதல் கதை

கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஆல்பா பாப்டிஸ்டா செப்டம்பர் 9, 2023 அன்று கேப் காட் நகரில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, இருவரும் தங்கள் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த ஜோடி 2022 ஆம் ஆண்டு அமைதியாக டேட்டிங் செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தந்தையாகும் கனவு நனவானது

திருமணத்திற்குப் பிறகு, 2024 நவம்பரில் அக்சஸ் ஹாலிவுட் பேட்டியில் கிறிஸ், “ஒரு நாள் தந்தையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அப்பா என்ற பட்டம் ஒரு அற்புதமான ஒன்று” என்று கூறி தனது கனவுகளை பகிர்ந்துகொண்டார்.

சினிமா பக்கம்

சமீபத்தில் கிறிஸ் “ஹனி டோன்ட்!”, “மெட்டீரியல்ஸ்” மற்றும் “சேக்ரிஃபைஸ்” ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்து அவர் “மார்வெலின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே” மூலம் மீண்டும் திரைக்கு வர வாய்ப்புள்ளது என்றாலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

மறுபுறம், ஆல்பா பாப்டிஸ்டா கடைசியாக “பார்டர்லைன்” படத்தில் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள “மதர் மேரி” மற்றும் “வோல்ட்ரான்” படங்கள் தயாராகி வருகின்றன.