தொலைக்காட்சித் தொடர்களில் தொடங்கி பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்து கலக்கி வருபவர் மௌனி ராய்.


கான் திரைப்பட விழாவில் மௌனி!


கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான மௌனி ராய், இந்தத் தொடர் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.  சென்ற ஆண்டு ஜனவரி 27ம் தேதி தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்டை திருமணம் செய்து கொண்ட மௌனி ராய், அதன் பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இறுதியாக பிரம்மாஸ்திரா படத்தில் இவர் நடித்த ஜூனூன் கதாபாத்திரத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், கான் விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகை மௌனி ராயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற கான் திரைப்பட விழா,  கடந்த மே 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


பூனை நடைபோடும் அழகிகள்


உலக நாடுகளின் பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், இந்த ஆண்டு 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. வரும் மே 28ஆம் தேதி வரை இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது. கான் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் இந்தியப் பிரபலங்கள் கலந்துகொண்டு தொடர்ந்து இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் வருகின்றனர்.


அந்த வகையில் நடிகை மௌனி ராய் மஞ்சள் நிற உடை அணிந்து கலக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.  முதன்முறையாக மௌனி ராய் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி மௌனி ராயை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


 






முன்னதாக கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த உடை இணையத்தில் வைரலானது. 19ஆவது முறையாக ஐஸ்வர்யா ராய் கான் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட்டில் நடந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா ராயின் இந்த உடை கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 


மேலும் முன்னதாக நடிகைகள் மிருணாள் தாக்கூர், சாரா அலி கான், ஏமி ஜாக்சன், ஈஷா குப்தா, மனுஷி சில்லர் ஆகியோரும் கான் விழாவில் கலந்துகொண்டு ரெட் கார்ப்பெட்டில் நடந்தனர். இவர்களது ஃபோட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் லைக்ஸ் அள்ளின. 


மேலும் படிக்க: Sarath Babu Death: 'தனக்கென தனி முத்திரை பதித்தவர்' சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் இரங்கல்..!