திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival).  கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து  நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். இந்த 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 2022 மே 17 ம் தேதியான நேற்று தொடங்கி வருகின்ற 28 வரை நடைபெற இருக்கிறது. 


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடந்தனர்.  இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், நடிகை தமன்னா உள்ளிட்ட 12 பேர் தென்னிந்தியாவிலிருந்து சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாக்கு ஹெலிகாப்டரில் சென்று களமிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முற்றிலும் டார்க் நீல நிறத்தில் டி சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கெத்தாக ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினார். 


கடந்த ஞாயிற்றுகிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு பின் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கும் நேரடி நிகழ்ச்சி இதுவாகும்.






முன்னதாக, கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின்போது ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கேன்ஸ் செல்லும் இந்த குழுவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியாவில் இருந்து வழிநடத்தி வருகிறார்.  


இந்த விழாவில் நாட்டுப்புற பாடகர் மேம் கான், நடிகர்கள் நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா பாட்டியா மற்றும் வாணி திரிபாதி, இரண்டு முறை கிராமிய விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், மற்றும் CBFC தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண