பெண்களோ ஆண்களோ யாராக இருந்தாலும் பளபளப்பான சருமைத்தையும் , முகத்தையும் பெற வேண்டும் என்பதுதான் விருப்பம். அதற்காக நம்மில் சிலர் கடுமையான மெனக்கெடல்களை கூட செய்வோம்.ஒரு தனிநபராக, உங்கள் முகம் மற்றும் தோல் பரமாமரிப்பிற்கு தேவையான பொருட்களைக் கண்டுபிடிப்பது முக்கியம். அதே நேரத்தில் ஸ்கின் கேர் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னதாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களை கடைப்பிடிப்பதும் அவசியம்
1. உங்கள் சருமத்தின் வகையை அறிந்து கொள்ளுங்கள்:
சரும பராமரிப்பை செய்வதற்கு முன்னதாக நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை உங்கள் தோலின் வகையை அறிந்துகொள்வதுதான். உங்களுக்கு எண்ணெய், வறண்ட, சென்டிட்டிவான அல்லது கலவையான சருமம் உள்ளதா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சரும வகைக்கு ஏற்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதுதான் சிறந்தது.
2. மிகைப்படுத்தப்பட்ட பொருட்கள்:
திரைப்பட நடிகைகள் அல்லது சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கின் கேர் புராடெக்டை புரமோட் செய்யலாம். அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நீங்கள் ஒரு தயாரிப்பை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதனை பயன்படுத்துவதற்கு முன்னதாக அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டைப்பாக இருக்கிறதா? என்பதை அறிந்துக்கொள்ளுங்கள் . குறிப்பாக ஆன்லைனில் ஸ்கின் பாதுகாப்பு பொருட்களை வாங்கும்பொழுது, எவ்வளவு நல்ல கமெண்ட்ஸ் வந்திருக்கிறது அல்லது எத்தனை ஸ்டார்ஸ் கொடுத்திருக்கிறார்கள் என்பதை பொருட்படுத்தாமல், பொருட்களின் பட்டியலைச் சரிபார்ப்பதுதான் முக்கியம்.
3. அடிப்படைகளை அறிந்து கொள்ளுங்கள்:
எந்தவொரு சிறந்த தோல் பராமரிப்பு முறைக்கும் அடித்தளமாக இருப்பது சுத்தமான, ஹைட்ரேட் செய்யப்பட்ட , சூரிய-பாதுகாப்பு, சிகிச்சை போன்ற அம்சம்தான். அதனை சரிபாருங்கள். அது எந்த வகை ஸ்கின் டைப்பாக இருந்தாலும் சரி.
4. பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்:
ஏதேனும் புதிய தயாரிப்பை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். அதனை எப்படி செய்ய வேண்டும் என்றால் உங்கள் முன்கையில் உள்ள தோலின் ஒரு சிறிய பகுதியில் வாங்கிய பொருளை பயன்படுத்தி சோதிக்கவும். , உங்களுக்கு ஒவ்வாமை இருந்தாலும் சருமத்தில் அரிப்பு , வீக்கம் , அல்லது சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். எதுவும் எதிர்வினை ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு முகத்தில் பயன்படுத்துங்கள்.
5. சரும மருத்துவரைப் அணுகவும்:
நல்ல சருமம் வேண்டும் என்பதில் நீங்கள் தீவிரமாக இருந்தால், சரும மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் உங்கள் சருமத்தைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தயாரிப்பு மற்றும் அறிவுரைகளையும் வழங்குவார்கள்.