Mansoor Ali Khan: மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் ரத்து- உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்தை உயர்நீதிமன்ற ரத்து செய்தது.

Continues below advertisement

சில மாதங்களுக்கு முன் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் எக்ஸ் வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவை செய்திருப்பதாகவும், இதை அவதூறாக கருத முடியாது என கருத்து தெரிவித்தார்.

Continues below advertisement

ரூ.1 லட்சம் அபராதம்

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும், இதே விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார், உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

அபராதம் ரத்து

இந்நிலையில், தனது நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட மனு தனி நீதிபதியால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதை எதிர்த்து மன்சூர் அலிகான் மேல் முறையீடு செய்திருந்தார். இதனிடையே நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. தனி நீதிபதி தள்ளுபடி செய்த உத்தரவை மட்டும் உறுதி செய்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரணியன், ஆர்.சக்திவேல் அமர்வு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க 

Deepika Padukone: அப்படிப்போடு.. கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தீபிகா படுகோனே.. குஷியில் ரசிகர்கள்!

Mari Selvaraj: என்னுடைய படங்களில் திருமாவளவனின் பங்கு.. உண்மையை போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

Continues below advertisement
Sponsored Links by Taboola