பிரபல நடிகை அமலாபாலின் ‘கடாவர்’  திரைப்படம் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.


மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும்  திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


 






அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார்.


கதையின் கரு


கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடித்துள்ளார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார்.


அமலாபால் தயாரித்துள்ள இந்தப்படம் பிரபல ஓடிடித்தளமான டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் படம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர