ஆண்ட்ரியா... தமிழ் சினிமாவின் மல்டி பங்களிப்பு. பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல பகுதிகளில் புகுந்து கட்டி அடிக்கும் புஷ்வானம். ஆண்ட்ரியாவின் பாடல்களுக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ... அதே போல அவர் வெளியிடும் ஸ்டில்களுக்கும் எப்போதும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. 






 


ஹாட் பிக்சர்களை அடிக்கடி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அனைவரையும் கிறுக்கு பிடிக்க வைப்பவர். அவரது மேற்கத்திய ஸ்டைல், தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் எனிடைம் பேவரிட் ஆக இருந்து வருகிறது. பாடகியாக அறிமுகமாகி, நாயகியாக அவதாரம் எடுத்த ஆண்ட்ரியா, அழகான கதாபாத்திரங்கள் மட்டுமில்லாது, ஆக்ரோஷமான பேய் வேடங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடித்த அரண்மனை 2 பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் காரணமாக தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா, அடிக்கடி சுற்றுலாச் செல்வதும் அங்கு எடுக்கப்படும் படங்களை இன்ஸ்டாகிராமி,ல் பதிவேற்றம் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 


இந்நிலையில் தான், சமீபத்தில் ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த போட்டோ... சமூக வலைதளத்தில் பற்றி எரிந்து வருகிறது.





தொப்பிளுக்கு இடது பக்கத்தில் அவர் பட்டாம்பூச்சி டாட்டூ குத்தியிருந்தார். அதை தெளிவாக காட்டும் விதமாக அந்த போட்டோவையும் பதிவிட்டிருந்தார். இது ஒன்று போதாதா, அவரது ரசிகர்களுக்கு, ‛பட்டாம்பூச்சிக்கு தானே தெரியும்... எங்கே அமர வேண்டும்... என்று...’ என்றும், ‛பார்த்து பறந்து போய்விடப் போகிறது பட்டாம்பூச்சி என்றெல்லாம் கமெண்ட்களை அள்ளித்தட்டி வருகின்றனர். சிலர், ‛டாட்டூ குத்த இடமே இல்லையா...’ என்று கிண்டல் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 






 


ஆண்ட்ரியாவின் டாட்டூ தற்போது பேசும் பொருளாகியிருப்பதால், அவரது பட்டாம்பூச்சி.. பலரின் இணைய பக்கத்தில் அமர்ந்துள்ளது. 


இன்றைய முக்கிய சிறப்புச் செய்திகள் இதோ...


Survivor Tamil: வனமே வனத்திற்கு வந்தது போல்... சர்வைவரில் வந்திறங்கிய வனேசா குரூஸ் யார்?


TN Local Body Election: விழுப்புரம்... உயர்வது யார் கரம்...? பொன்முடி Vs சிவி சண்முகம்... உள்ளாட்சி கிங் யார்?


‛காபி குடித்தால் கொரோனா வராது’ காபி வாரிய விரிவாக்க துணை இயக்குனர் பேச்சு!


அமைச்சர் துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு... போராட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள்!