இந்த விழா மே 11-ஆம் தேதி லண்டனின் O2 அரங்கில் நடைபெறுகிறது, மேலும் நகைச்சுவை நடிகர் ஜாக் வைட்ஹால் முன்னிலை வகிப்பார். 4,000 பேர் கொண்ட பார்வையாளர்கள் முகமூடிகளை அணியவோ அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்கவோ தேவையில்லை . கொரோனா முன் பரிசோதனை செய்தல் மட்டும் போதும் . லண்டனின் O2 அரங்கில் மே 11 விழாவை 4,000 கொண்டு தொடங்க இருக்கிறது .
நிகழ்வுகள் ஆராய்ச்சி திட்டத்தின் சமீபத்திய சேர்த்தல் இது, பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படலாம் என்பதை தொடர்ந்தே இந்த ஆராய்ச்சி இருக்கக்கூடும். இந்த திட்டத்தில் ஏப்ரல் 30 லிவர்பூல் இரவு விடுதியும் மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சுமார் 3000 பேருக்கு விருந்தளிக்க போகிறார்கள், மே 2 பாடல் நிகழ்ச்சியுடன் இணைந்து சுமார் 5000 பேர் கலந்துகொள்வார்கள் என்று பிரிட்ஸ் அவார்ட் தெரிவித்துள்ளது. பிரிட்ஸுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு மே 15 அன்று 21,000 பார்வையாளர்களைக் கொண்டு FA கோப்பை இறுதி போன்ற விளையாட்டுக் காட்சிகளும் நடக்க இருக்கிறது .
பெரும்பாலான டிக்கெட்டுகள் - 4,000 பேரில் 2,500 பேர் - லண்டனில் இருந்து வரும் முக்கிய முன்களப் பணியாளர்கள் "அவர்களின் குறிப்பிடத்தக்க கடின உழைப்பு மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு நன்றி " தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது . அவார்டின் முக்கிய முன்களப் பணியாளர்கள் வரும் வியாழக்கிழமை முதல் பிரிட் விருதுகள் வலைதளம் வழியாக இலவச டிக்கெட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.அனைத்து பார்வையாளர்களும் தங்களின் கொரோனா நெகடிவ் சோதனைக்கான ஆதாரத்தை முன்னதாகவே அவார்ட் குழுவிற்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.